ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா; அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநல சிகிச்சை தேவையா என அறிவதற்கான அறிக்கையொன்றினைக் கோரும் ஆணையொன்றினைப் பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தக்சிலா ஜயவர்த்தன என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவருக்கு மனநல சிகிச்சை தேவையா என்பதை அறிய, அறிக்கையொன்றினைக் கோரும் ‘மண்டமஸ்’ ரிட், ஆணையொன்றினை பிறப்பிக்குமாறு கோரியே, மேற்படி நபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
(செய்தி மூலம்: ஆர். சிவராஜா – சிரேஷ்ட ஊடகவியலாளர்)