நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

🕔 September 18, 2015

Ambassador Satheek - 01
– அஸ்ரப் ஏ. சமத் –

நெதா்லாந்து நாட்டின் இலங்கைக்கான துாதுவராக  நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஜே. சாதிக், கடந்த வாரம் நெதா்லாந்து நாட்டின் மன்னா் வில்லியம் அலக்ஸான்டரிடம் தனது நியமனக் கடித்தை கையளித்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஜே. சாதிக், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நெதா்லாந்து நாட்டுக்கான இலங்கைத் துாதுவராக நியமிக்கப்பட்டாா்.

ஏற்கனவே, இவர் சஊதி அரேபியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தனது முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.

1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட ஏ.எம்.ஜே. சாதிக், சர்வதேச மட்டங்களில் நடைபெற்ற பல்வேறு பயிற்சிகளில் கலந்து கொண்டவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்