சபாநாயகருக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் வழக்கு
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்று இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணியொருவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டியதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் எனத் தெரிவித்தே, மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அனுண லக்சிறி என்பவரே, இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.