ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

🕔 December 8, 2018

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

கடுமையாக நோயுற்றுள்ள நிலையிலேயே, ஞானசார தேரர்ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில இணையத்தளமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்