உள்ளக விசாரணை அடுத்த வருடம் ஆரம்பமாகும்: மங்கள சமரவீர

🕔 September 17, 2015
Mangala samaraweera - 01லங்கையின் இறுதிக்கட்ட சண்டையின் போது – இடம்பெற்றதாகக் கூறப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள், எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதோடு, ஒன்றரை வருடங்களுக்குள் குறித்த உள்ளக விசாரணை –  நிறைவுக்குக் கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்தும் போது, சர்வதேசத்தின் ஒத்துழைப்பும், சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளும் பெறப்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்