நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

🕔 December 4, 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர், மேற்படி வர்த்தமானி அறிவித்தலுககு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்