இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த

🕔 December 3, 2018

பிரதமராக தான் பதவி வகிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுடன், தனக்கு உடன்பாடு கிடையாது என்று, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடைக்காலத் தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நாளைக் காலை மேன்முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், தனது அறிக்கையில் மஹிந்த தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும், ஏனைய அமைச்சர்களும் பதவி வகிக்பதற்கு, இன்று திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் 12ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்