வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு

🕔 December 3, 2018

– அஷ்ரப் ஏ சமத் –

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘விடியல்’ எனும் நுாலின் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதல் பிரதியினை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில் ஏ.ஆர்.எம். அரூஸ் பெற்றுக் கொண்டார்.

முன்னாள் பிரதியமைச்சா்  எம்.எஸ். அமீரலி, கலைச்செல்வன் ரவுப், காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், கலாபூசணம் திக்குவல்லை கமால், சட்டத்தரணி. ராஜ குலேந்திரன், யாழ் அஸீம், நவமணி ஆசிரியர் என்.எம் அமீன் மற்றும் கலாபூசணம் மு. சிவலிங்கம் ஆகியோர் பிரமுகர்களாகக் கலந்து கொண்டு நூல் பற்றிய உரைகளை நிகழ்த்தினர்.

நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக  உளத்துறை விரிவுரையாளா்  யு.எல்.எம் நௌபா் மற்றும் கவிஞா் மூதுாா் முகைதீன் ஆகியோர்  கௌரவ அதிதிகளாக கலந்து  கொண்டனர்.

நுாலாசிரியை இதன்போது பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்