ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம்

🕔 December 2, 2018

– அஹமட் –

க்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 23ஆம் திகதி காத்தான்குடியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டம் அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் ஏறாவூர் இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போது, இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது.

சமாதானக் கூட்டமைப்பின் தவிசளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், பிரதித் தலைவர் நஸார் ஹாஜி உட்பட உயர்பீட உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில், உயர்பீடத்தின் அங்கீகாரத்துக்கு இணங்க, கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டமொன்று கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்