பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு

🕔 December 1, 2018

பொலிஸார் 2891 பேருக்கு, வெவ்வேறு வகையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்