எரிபொருள்களின் விலைகள், நள்ளிரவு தொடக்கம் மீண்டும் குறைகின்றன: 135 ரூபாவுக்கு பெற்றோல்

🕔 November 30, 2018

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல், மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க சகல வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் 05 ரூபாவினால் குறைகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இத்துடன் மூன்றாவது தடவையாக, எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிணங்க ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இறுதியாக 152 ரூபாவுக்கு விற்கப்பட்ட 92 ஒக்டைன் பெற்றோல், தற்போதைய விலைகுறைப்பின் காரணமாக, 135 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளது.

நொவம்பர் 02ஆம் திகதியன்றும் பின்னர் 15ஆம் திகதியன்றும் ஏற்கனவே, எரிபொருளுக்கான விலைகளை தற்போதைய அரசாங்கம் குறைத்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்