வவுணதீவு பொலிஸ் கொலை; கருணா அம்மான் தொடர்பா: விசாரணை வேண்டும் என்கிறார் நளின் பண்டார

🕔 November 30, 2018

ட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட  விவகாரத்தில், புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானுக்கு தொடர்பா என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இன்று வெள்ளிக்கிழமை சபையில் கேள்வியெழுப்பினார்.

மேலும், இந்த விடயத்தில் ஜனாதிபதி அவசரமாகத் தலையிட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, மேற்படி பொலிஸார் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று, மட்டக்களப்புக்கு விரைந்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், இந்த விசாரணைக்குழு அங்கு சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.

(செய்தி மூலம்: ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்