கட்சித் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற அமர்வு: இரண்டையும் புறக்கணித்தது ஆளுந்தரப்பு
நாடாளுமன்ற அமர்வினை ஆளுந்தரப்பினர் இன்று புறக்கணித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றைய தினமும் ஆளும் கட்சியினர் சபை அமர்வினை புறக்கணித்தனர்.
முன்னதாக நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 09.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய, இன்றைய பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற சபை அமர்வினையும், ஆளுந்தரப்பினர் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.