கிரீன் டீ குடிப்பதால் பலன் உண்டா?
ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடியவர்கள் ‘கிரீன் டீ’ குடிப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்று, பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான இந்தியாவைச் சேர்ந்த ருஜுதா திவேகர் கூறுகிறார்.
இது குறித்து அவர் பேசும்போது,” கிரீன் டீ என்பது நிச்சயம் பலனளிக்கக்கூடியது. ஆனால் யாருக்கு என கேட்டால் அதனை விற்பனை செய்பவர்களுக்கே” என்பேன் என்கிறார்.
கிரீன் டீ என்பது பலனளிக்கும். ஆனால் முறையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகம் குடிப்பது உங்களது உடல்நலனை பாதிக்கக்கூடும்.
கிரீன் டீயில் ‘கஃபீன்’ இருக்கிறது. இதனால் தலைவலி, தூக்கம் வருவதில் சிக்கல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.
ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடியவர்கள் கிரீன் டீ குடிப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
கிரீன் டீயில் ‘டேனின்’ இருக்கிறது. இது இரும்புச்சத்தை உடல் கிரகிப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் அளவாக எடுத்துக்கொண்டால் பிரச்னை இல்லை.
கிரீன் டீ குடிப்பதால் ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே கிரீன் டீ குடிக்க விரும்பினால் எவ்வளவு உட்கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்