ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விடுவிக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் முயற்சி: ஆங்கில ஊடகம் செய்தி
முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படமெடுத்த ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை, நீதிமன்றில் முன்னிலையாக்காமல் விடுவிப்பதற்கு, கொழும்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் முயற்சித்ததாக ‘சிறி லங்கா மிரர்’ செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
நீதிமன்றில் இன்று சரணடைந்த பின்னர் வாக்கு மூலம் வழங்கிய முப்படைகளின் பிரதானி, பகல் உணவுக்காக நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது, அவரை ஊடகவியலாளர்கள் படமெடுத்தனர்.
இதன்போது, ஊடகவியலாளர்களைத் தள்ளி விட்ட முப்படைகளின் பிரதானியினுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், ‘அருண’ மற்றும் ‘த சண்டே மோர்னிங்’ பத்திரிகைகளுக்கான புகைப்பட ஊடகவியலாளர் இந்திக்க ஹந்துவல என்பவரின் நெஞ்சில் குத்தியதாக ‘த மோர்னிங்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றினை பதிவு செய்ததாகவும் ‘த மோர்னிங்’ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஊடவியலாளரைத் தாக்கிய நபர், கைதான போது எடுக்கப்பட்ட வீடியோ