கூடியது நாடாளுமன்றம்; புறக்கணித்தது ஆளுந்தரப்பு

🕔 November 27, 2018

நாடாளுமன்ற அமர்வினை ஆளும் கட்சியினர் இன்று புறக்கணித்துள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் நாடாளுமன்றம் ஆரம்பமானது.

இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, ஆளும் தரப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆளும் தரப்பினரின் பங்குபற்றலின்றியே நாடாளுன்ற அமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமை பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 500 பொலிஸாரும், இரண்டு கலகம் அடக்கும் பொலிஸ் குழுவினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்