சுயாதீனமாகச் செயற்படும் கதை, உண்மைக்குப் புறம்பானது: சுதந்திரக் கட்சியின் செயலாளர்

🕔 November 26, 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சபையில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்தே செயற்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற அரசியல் செயற்பாடுகளை தவிர்க்கும் முகமாகவே ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினார். ஆனால் எதிர் தரப்பினர் அதனை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்து விட்டனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்