நூறாவது வயதில் அப்துல் காதர்; தர்கா நகரின் மூத்த மனிதர்

🕔 November 25, 2018

– அஸீம் முகம்மட் –

ரபரப்பான தற்கால உலகில், ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதென்பது பெரும் சவாலானதாக மாறிப் போயுள்ள நிலையில், தர்கா நகர் – வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர், இன்று ஞாயிற்றுக்கிழமை தனது நூறாவது வயதை அடைந்துள்ளார்.

இரத்தினபுரியில் 1918 .11 .25  இல் பிறந்த இவரின் பெற்றோர், இஸ்லாமியராக இருக்கவில்லை.

இளமைப் பருவம் தொடக்கம், தையல் தொழிலில் ஈடுப்பட்ட இவர், இந்தியாவிலிருந்து வந்து, தர்கா நகரில் குடியேறிய காஸிம் ஸாஹிப் என்பவரிடம், தையல் வேலை செய்தார்.

தனது 30ஆவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இவர், தனது முதலாளி காஸிம் ஸாஹிப்பின் மகள் ஸொஹரா பீபி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

100 வயதை அடைந்துள்ள இவருக்கு 11 பிள்ளைகளும், 56 பேரப் பிள்ளைகளும் உள்ளனர். அந்த வகையில் தனது 04 சந்ததிகளை இவர் கண்டுள்ளார்.

இன்று 100ஆவது வயதை அடைந்த அப்துல் காதரை, பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை தொகுதி அமைப்பாளருமான ஹஸீப் மரிக்கார் சந்தித்து நலம் விசாரித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்