நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு

🕔 November 15, 2018

நாடாளுமன்றம் நாளை பகல் 1.30 மணிக்கு கூடும் என்று, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது.

ஆயினும், கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், நாடளுமன்றத்தை நாளை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது,  நொவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டமைக்கு இணங்க, அதனை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்தை நாளை 16ஆம் திகதி பிற்பகல் 1.30 இற்கு கூட்டுவதாக தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்