நான் பிரதமராகப் பதவியேற்றதும், நாட்டில் புதிய எதிர்பார்ப்புகள் தோன்றின: நாடாளுமன்றில் மஹிந்த

🕔 November 15, 2018

குரல் வாக்கெடுப்பு நடத்த முடியாதென, மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

தான் புதிய பிரதமராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் பல புதிய எதிர்பார்ப்புகள் தோன்றியதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு வருடம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலை மோசமாகியிருக்குமென பிரதமர் மஹிந்த குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையை ஆற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை ஐக்கிய தேசியக் கட்சி 21 பில்லியன் ​அ​மெரிக்க டொலர்களை கடன் வாங்கியுள்ளதென்றார்.

கடந்த அரசாங்கம் அதிகரித்த எரிபொருள்   விலையை இன்றிரவே குறைப்போம் எனவும் அவர் கூறினார்.

சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மேற்கு நாடுகளின் விருப்பத்துக்கும் சார்பாக நடந்து கொள்ளாமல்,  சுயாதீனமாக நடந்துக்கொள்ள வேண்டுமெனவும்  மஹிந்த ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்