நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு
நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார்.
சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், நாளை காலை 8.30 மணிக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டமொன்றுக்கும், சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.