நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு: நாளை வரை, பரிசீலனை ஒத்தி வைப்பு
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான பரிசீலனை, நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் – கால அவகாசம் கோரியதை அடுத்தே, இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக இன்று 12 மனுக்கள், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.