பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர்

🕔 September 15, 2015

வீதியை மறித்து  நின்ற யானையைப் பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த யானையின் தாக்குதலில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம், இந்தியாவின் மேற்குவங்க மாநில வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றது.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானைக்கு பயந்து கொண்டு, அந்த சாலையில் சென்ற வாகனங்கள் தமது பயணத்தினை நிறுத்தி நின்றிருந்தன. ஆனால் அந்த யானை அங்கிருந்து செல்லவில்லை.

இந்நிலையில், யானை காட்டுக்குள் செல்லும் வரை காத்திருக்க பொறுமையில்லாத இருவர், தங்கள் மோட்டார் சைக்கிளில் யானையை கடந்து செல்ல முயன்றனர். இதன்போது கோபமடைந்த யானை, குறித்த இருவரையும் வழிமறித்து தாக்கியது.

இதில் அதிர்ஷ்டவசமாக யானையிடமிருந்து இருவரும் மயிரிழையில் உயிர் தப்பி, தங்களது மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு, தலைதெறிக்க  ஓடினர். இந்த நிலையில், மேற்படி நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை,  யானை – அடித்து துவம்சம் செய்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்