ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு
ஜனாதிபதிக்கு எதிராக, மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை அறிவித்துள்ளன.
அரசியல் யாப்புக்கு முரணாக நாடாளுமன்றை கலைத்தமைக்கு எதிராகவே, மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக மேற்படி கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு வந்ததாகவும், ஆனால் அவர் மூலம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை அவரே மீறி விட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.
அலரிமாளிகையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மங்கள சமரவீர இதனைக் கூறினார்.
மேலும் நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆகியவற்றில் தமது பெரும்பான்மைப் பலத்தினையும், தம் பக்கமுள்ள நியாயத்தினையும் நிரூபிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் மங்கள தெரிவித்தார்.