முன்னைய பாதுகாப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியாது: பொலிஸ் மா அதிபர்
ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்கவே பொலிஸ் திணைக்களம் செயற்படுமென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னளா் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்
ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவே பொலிஸார் செயற்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.