அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது
பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில வைத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர், அங்கு கலகத்தில் ஈடுபட்டோர் மீது நடத்திய துப்பாக்சிச் சூடு தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த 28ஆம் திகதியன்று தனது அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அவருடன் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்குவதற்கு முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்சிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் போது பதிவான சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
வீடியோ