மு.காங்கிரஸ் – தேசிய சூரா கவுன்சில் சந்திப்பு: அரசியல் நிலைவரம் குறித்து பேச்சு

🕔 November 1, 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை, தேசிய சூரா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையிலான அதன் முக்கியஸ்தர்கள், இன்று வியாழக்கிழமை சந்தித்தனர்.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும், தேசிய நலனுடன் முஸ்லிம் சமூக நலன் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சூறா கவுன்சிலின் சார்பில் அதன் தலைவருடன், அதன் ஏனைய உறுப்பினர்களில் சிலரான ஜாவித் யூசுப், ரிஸா எஹியா, சட்டத்தரணி ரி.கே. அசூர், அஷ்ஷேய்க் சியாத் இப்றாகிம் ஆகியோர் பங்குபற்றினர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மௌலானா, ஏ.எல்.எம். நசீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி அனுபவ ரிதியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

எவ்வாறாயினும், ஒற்றுமையாக இருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்கள் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூறா கவுன்சில் உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்