ஒலுவில்: அடுத்து என்ன ??

🕔 September 15, 2015

Article - 133
லுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர், கடந்த 04 வருடங்களாக ஒலுவில் பிரதேச கரையோரம் கடலரிப்பால் பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவ் வாரம் ஏட்டிக்குப் போட்டியாய் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களின் களவிஜயங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏதோ நடக்கப் போவது போல், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுளளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு கருதியும், பிரச்சினையை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல் – அடுத்து என்ன செய்யலாம் என்று தீர்வை நோக்கி நகர்வதற்கான முதல் படியாகவும் இந்த கட்டுரை வரையப்படுகின்றது.

ஆரம்பத்தில் சில அடிப்படைத்தரவுகளை உற்று நோக்குவோம். இத் திட்டத்துக்காக டென்மார்க் அரசின் நிதியுதவியை முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான எம்.எச் எம். அஷ்ரஃப் பெற்றிருந்தார். LHIஎன்று அழைக்கப்படும் Lanka Hydraulics Institute இனால் இதற்கான சாத்தியவள கற்கைகள்(Feasibility studies) மற்றும் வடிவமைப்பு வேலைகள் (Designing) மேற்கொள்ளப்பட்டன.

1995 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைகள் 2003 ஆம் ஆண்டளவிலேயே முடிவுக்கு வந்தன. சாத்தியவள கற்கைகளின் போதே, உத்தேச துறைமுகம் அமையவிருக்கும் பிரதேசத்துக்கு அண்மித்த கரையோரம் – கடலரிப்புக்கு உள்ளாகும் என்று அறியப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இணைக்கப்பட்டுள்ள சட்டிலைட் படங்கள் கடந்த 06 வருடங்களாக, 2009 தொடக்கம் 2015 வரை துறைமுகத்துக்கு வடக்கே இடம் பெற்றுள்ள படிமுறையான கடலரிப்பைக் காட்டுகின்றன. இலங்கையின் மேற்குக்கரை போலல்லாது, கிழக்குக் கரையோரமானது பரந்து விரிந்த வங்காள விரிகுடாவின் மூலம் ஏற்படும் சக்திமிகுந்த அலைகளின் தாக்கத்துக்கு உள்ளாவதால், அலைமுறிக்கும் அணைகள் Breakwater அமைத்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள்,
துறைமுகத்தை அண்மித்துள்ள இடங்களை – அலைவந்து கரையில் அடிக்கும் கோணத்துக்கு ஏற்ப, கடலரிப்பை ஏற்படுத்தும் என்று, திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கள் கவலைகளை வெளியிட்டிருந்தனர் .

இருந்த போதும் மறைந்த மு.கா தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் கனவுகளில் ஒன்றான இந்தத்திட்டம் பொருளாதார ரீதியாகவும் ,சமூக ரீதியாகவும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என்ற நியாயப் படுத்தலில் முன்னெடுக்கப்பட்டது.

கடலரிப்பிற்கான தீர்வாக breakwater கள் முன்மொழியப் பட்டிருந்தாலும், சிறிய அளவிலான குறைந்த நீளமானவையே இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம், ஒன்றில் நிதி ஒதுக்கீடு தொடர்பானதாகவோ அல்லது குறித்த ஒரு பிரதேசத்தில் கடல்ரைப்பைக் குறைத்த போதும் அதற்கு அப்பால் உள்ள இன்னொரு பிரதேசம் கடலரிப்புக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது என்று கருதிய்மையாகவோ இருக்கலாம்.

தீர்வுகள்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கல் போன்ற நிவாரண நடவடிக்கைகள் தவிர்ந்த, பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

1) ஆரம்ப கட்டமாக, கட்சி பேதங்களை மறந்து பொது வேலைத்திட்டம் ஒன்றுக்காக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் .

2) துறைசார் நிபுணத்துவம் அடங்கிய பொருத்தமான பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து, அடுத்து இடம் பெறவேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்து, முன்மொழிவைத் தயாரித்தல். இந்த விடயத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் பங்களிப்பு அத்தியவசியமானது. இதன்போது தேவைப்படும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் தரவுகளையும் LHI இடமிருந்து பெற்றுத்தரவேண்டியது அரசியல் வாதிகளின் பொறுப்பாகும்.

3) 01 தொடக்கம் 02 மாதங்களுக்குள் உத்தேச முன்மொழிவை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து இதற்கான அங்கீகாரத்தைப் பெறல்.

பருமட்டான ஒரு முன்மொழிவு (A tentative proposal )

Coastal Engineering இல் எனக்கு விசேட நிபுணத்துவம் இல்லை. இருந்த போதும், மிக மேலோட்டமான தீர்வொன்றை எனது சிற்றறிவுக்குட்பட்டு முன்மொழியலாம் என்று நினைக்கிறேன்.

இறுதியாக உள்ள படத்தில் காட்டப்பட்டவாறு, தள்ளித்தள்ளி அமைக்கப்பட்டுள்ள offshore breakwater ஒலுவில் கரையோரத்தின் நீளத்துக்கும் அமைக்கப்படும் (சரியான இடவமைவு, வடிவமைப்பு மேற்கொள்ள bathymetry , wave propagation தொடர்பான தகவல்கள் அவசியமாகும். இது ஒரு வெறும் arbitrary proposal மட்டுமே) இதனால், கடலரிப்பு வடக்காக அமைந்துள்ள பகுதிக்கு நகர்த்தப்படும் . (நெற்காணிகளை அடுத்துள்ள கரையோரம் ). மேற்குறித்த பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகள் குறைவு என்பதால் பாதிக்கப்படும் காணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், கடலரிப்புக்கான தீர்வு என்பது கோடிக்கணக்கான செலவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தெளிவாக புலப்படுகின்றது. துறைமுகத்தின் பொருளாதார நன்மைகளைக் குறித்து வாதிட்டு, இதற்கான நிதிஒதுக்கீட்டைச் செய்யவேண்டியது அரசியல் வாதிகளுக்குள்ள சவலாகும்.Oluvil - 01Oluvil - 02Oluvil - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்