அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை

🕔 October 29, 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் சூடுபட்ட ஒருவர் இறந்தமை தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது அவரை 05 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர், தனது அமைச்சிலுள்ள சில தனிப்பட்ட ஆவணங்களை எடுப்பதற்காக, நேற்றைய தினம் பெற்றோலிய அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அங்கு அவருடன் சிலர் மோதலில் ஈடுபடுபட முயற்சித்தனர்.

இச்சமயம், அர்ஜுனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் பின்னர் மரணமானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்