திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க; பிணையில் விடுவிப்பு

🕔 October 29, 2018

ண்டி – திகன முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘மகசோன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 07 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவினால் கடந்த மார்ச் 08 ஆம் திகதி அதிகாலை அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்