சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை என கிழக்கு மாகான கல்வி திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நாம் கல்வி அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து அண்மையில் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
எனினும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பான விபரம் கல்வி அமைச்சில் இல்லாமையினால் கிழக்கு மாகாணத்துக்கான விண்ணப்பம் கோரப்படவில்லை.
எனவே உடனடியாக கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பான விபரத்தை கல்வி அமைச்சுக்கு அறிவிக்கும்படி கிழக்குமாகான கல்வி திணைக்களத்திடம் கேட்டிருந்தேன்.
அதன்படி கிழக்கு மாகாண பாடசாலைகளில் போதியளவு சமய ஆசிரியர்கள் காணப்படுவதாகவும் இதுவரை சமய ஆசிரியர்களுக்கான எந்த வெற்றிடமும் பாடசாலைகளில் இல்லை எனவும், கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகவே எதிர்காலத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் ஏற்படுமிடத்து கிழக்கு மாகாணத்திலும் சமய ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.