கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு

🕔 October 8, 2018

க்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விஜயகலா, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது,  05 லட்சம் ரூபாய் ​பெறுமதியான சரீரப் பிணையில் அவரை விடுதலைச் செய்யுமாறு, நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்