அக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

🕔 October 6, 2018

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தியடைந்த மாணவர்களில், முதல் மூன்று இடங்களையும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் முதல் இடத்தை அக்கரைப்பற்று அஸ் ஸாஹிறா வித்தியாலய மாணவரும்,  இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை  ஒலுவில் பாடசாலை மாணவர்களும் பெற்றுள்ளனர்.

மூன்று கோட்டங்களைக் கொண்ட அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் மொத்தமாக 249 மாணவர்கள், இம்முறை தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இதற்கிணங்க, அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் 103 மாணவர்களும், பொத்துவில் கல்விக் கோட்டத்தில் 28 மாணவர்களும், அக்கரைப்பற்று கோட்டத்தில் 118 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்கள் உள்ளன.

Comments