13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

🕔 September 11, 2015
Faizar musthafa - 001
– அஸ்ரப் ஏ. சமத் –

மா
காணசபைகளுக்கான, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள   சிக்கல்களை, தற்போதைய தேசிய அரசில் ஒன்றிணைந்து  ஆராயவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தபா தெரிவித்தார்.

யூனியன் பிளேசில் உள்ள அமைச்சில், இன்று வெள்ளிக்கிழமை தனது  கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே, மேற்கண்ட விடயத்தினை கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“அடுத்துவரும் சில மாதங்களுக்குள், புதிய வட்டார முறைப்படி உள்ளுராட்சி தேர்தல்கள் நடத்தப்படும்.
மாநகர மற்றும் பிரதேச சபைகளுக்கு  புதிய சட்டதிட்டங்களை அமுலாக்க வேண்டியுள்ளது. மாகாணசபைகளுக்கான, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள   சிக்கல்களை, இந்த தேசிய அரசில் ஒன்றிணைந்து  ஆராயவுள்ளோம்.

கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவது உள்ளுராட்சி சபைகளின் கடமையாகும்.

கிராமங்களில் வாழும் மக்கள்  அசுத்தமான நீரைப் பருகுவதனால் சிறுநீரக நோய்களுக்கு ஆளாகின்றனர். அவா்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பொறுப்பு, குறித்த பிரதேசங்களை ஆளுகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கே உரித்தானது.

நாட்டிலுள்ள பிரதேசங்கள், மாநகரங்கள் மற்றும் மாகாணங்களின் நிர்வாகங்களைக் கையாளுகின்ற பொறுப்பு எனது அமைச்சுக்கு உரியதாகும்” என்றார்.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதியமைச்சா் பரண வித்தாரணவும், இங்கு இந்நிகழ்வில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்டார்.Faizar musthafa - 002
Faizar musthafa - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்