மின்னல் தாக்கி, சம்மாந்துறையில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி

🕔 September 11, 2015

Lightning - 02– யூ.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறையில் மின்னல் தாக்குதலுக்குள்ளான அலியார் முஹம்மது இப்றாஹிம் (57 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை தென்னம் பிள்ளை கிராமத்திலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்குதலுக்குள்ளான மேற்படி நபர், அவ்விடத்திலேயே பலியாகியுள்ளார்.

மரணமடைந்தவர், சம்மாந்துறை முதலாம் பிரிவைச் சேர்ந்தவராவார். கூலித் தொழிலாளியான இவருக்கு இரு ஆண்பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இதேவேளை, சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று பிற்பகல் கடும் காற்று வீசியதன் காரணமாக, பல வீடுகளின் கூரைகள் சேதமடைதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்