அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா

🕔 October 1, 2018

– யூ.எல்.எம். றியாஸ் –

ரசாங்க அதிபராகஅண்மையில் நியமனம் பெற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையாறறும் ஐ.எம். ஹனிபா, அவரின் சொந்த ஊரான சம்மாந்துறையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கௌரவிப்பு விழா, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இருந்து கலாச்சாரநிகழ்வுகளுடன் அரசாங்க அதிபர் ஹனீபா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா சபையின் தலைவர் எம்.ஐ. அமீர் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் மற்றும் அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் டி.எல்.எம். பண்டாரநாயக்க, ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம், அமைச்சின் மேலதிக செயலாளர்கள்உலமாக்கள், கல்விமான்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபாவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள்,கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் பொன்னாடை போற்றி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவித்தனர்.

Comments