ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு அருகில், கடலரிப்பு தீவிரம்

🕔 October 1, 2018

– முன்ஸிப் –

லுவில் துறைமுக சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரைப் பகுதிகள், கடந்த சில வாரங்களாக கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதன் காரணமாக, பாரியளவான நிலப்பகுதியினை கடல் உள்வாங்கியுள்ளதோடு, மேலும் நிலப் பகுதியினை கடல் காவு கொள்ளும் அபாயமும் உள்ளதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கடுமையான கடலரிப்புக்குள்ளாகி வருகின்ற பகுதியானது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பின்புறமாகவுள்ள நிலப்பரப்பு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இந்தக் கடலரிப்பு காரணமாக, அங்குள்ள தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒலுவிலில் கடலரிப்பைத் தடுப்பதற்காக, அங்கு சில இடங்களில் கரையை அண்டியதாக பாரிய பாராங்கற்கள் போடப்பட்டுள்ளன.

ஆயினும், கற்கள் போடாத இடங்களிலேயே தற்போது கடலரிப்பு தீவிரமாக உள்ளது.

Comments