வெள்ளத்தில் மூழ்கியது அக்குரணை நகரம்
🕔 September 30, 2018
அக்குறணை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான அடை மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அக்குறணை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி நகரமும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.