ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி: ஆயுதங்கள் சிக்கின

🕔 September 23, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட இருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலகுரக இந்தியதிரத் துப்பாக்கிகள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி கொலை சூழ்ச்சி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றவியல் விசாரணைப் பிரிவு இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இந்த துப்பாக்கி, ஜனாதிபதியின் கொலை சூழ்ச்சிக்குப் பயன்படுத்தப்படவிருந்தனவா என்ற கோணத்தில் விசாரணைகளை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரின் பணிகளுக்கு, இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள் தேவையில்லை என்ற நிலையில், பின்னர் எதற்காக குறித்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Comments