ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி

🕔 September 22, 2018

ரானின் அஹ்வாஸ் நகரில் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதிமானோர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரவிக்கின்றன.

இதேவேளை,  20 க்கும் அதிகமானோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.

அணுவகுப்பு நடைபெற்ற இடத்துக்கு அருகிலிருந்த பூங்காவிலிருந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரிகள் ராணுவ சீருடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

குறித்த தாக்குதல் 10 நிமிடங்கள் வரையில் நீடித்துள்ளது.

1980 – 1988 ஆம் ஆண்டுவரை, ஈரான் – ஈராக் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தத்தை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் மீதே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்