பலஸ்தீன் உயர் மட்டக் கலந்துரையாடலில், அமைச்சர் றிசாட் பங்கேற்பு
பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகெண்டார்.
இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லா இந்தக் கலந்துரையாடலை, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குனவர்தன, எம்.ஏ.சுமந்திரன், மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. தாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)