பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு

🕔 September 20, 2018

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ அவதானிப்பின் படி, அவர் நல்ல உளச் சுகாதார நிலையில் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒன்றிணைந்த எதிராணியினர் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதனைக் கூறினர்.

பொலிஸ் மா அதிபர் சில நேரங்களில் சிரிப்பதையும், அழுவதையும் காணலாம். சில நிகழ்வுகளின் போது ஊழியர்களை அவர் தாக்குகின்றார். இவை, இரண்டு வகையான மனநோய்களின் அறிகுறிகளாகும் எனவும் ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டாலும், வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றின் தூதுவராக, அவரை நியமிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் பத்திரண, தாரக பாலசூரி மற்றும் தேனுக விதானகம ஆகியோர் மேற்படி ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Comments