முசலி வீட்டுத்திட்டம்: கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு

🕔 September 3, 2018

ன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்துக்கான வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி நிதி போன்ற விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவைப் பெற்றுத் தருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முசலிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிலாவத்துறை நகர அபிவிருத்தி தொடர்பாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் அல்லிராணிக் கோட்டையில் கலந்துரையாடிய பின்னர், முசலி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுடனான கூட்டமொன்றை நடத்தினார்.

அக்கூட்டத்தில் தற்போது முசலியில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற வீட்டுத்திட்டம் மற்றும் கமத்தொழில் காப்புறுதி தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடி, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், அவ்விவகாரங்களை இவ்வாரம் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments