மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே
மக்கள் எதிர்ப்பார்த்த பொருளதார வளர்ச்சியைகடந்த மூன்று வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தால் நெருங்க முடியாதுள்ளதாக சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம் என அவர் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.