குடிநீர் திட்டங்களை மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

🕔 August 26, 2018
நுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு குடிநீர் திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார்.

ஊத்துப்பிட்டிய பிரதேசத்தில் 69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கல் திட்டம், கஹடகஸ்திலிய பிரதேசத்துக்குட்பட்ட முக்கியரியாவ மற்றும் வெளிகொல்லாவ பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்பவற்றை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று திறந்துவைத்தார்.

அத்துடன், பலுகஸ்வெவ கிராமத்துக்கு சுத்தமான குடிநீரை வழங்கும்நோக்கில் 42 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள குடிநீர் திட்டத்துக்கான வேலைகளும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அநுராதபுர மாவட்டத்தில் நிலத்தடி நீரில் காபன், இரும்பு மற்றும் அயன் தாதுப்புக்கள் அதிகம் காணப்படுவதால், அப்பிரதேசத்தில் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்ற. இதனை கட்டுப்படுத்துதற்காக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், சிரேஸ்ட பிரதித் தலைவர் ராவுத்தர் நெய்னா முஹம்மத், பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், உள்ளூரட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்