யானை தாக்கியதில் ஊடகவியலாளர் மரணம்

🕔 September 8, 2015

Priyantha rathnayaka - 01பிராந்திய ஊடகவியலாளரொருவர், காட்டு யானை தாக்கியதில் இன்று செவ்வாய்கிழமை காலை மின்னேரியாவில் மரணமானார்.

46 வயதுடைய, பிரியந்த ரத்நாயக்க என்பவரே, இவ்வாறு – யானையின் தாக்குதலில் பலியானார்.

மின்னேரியா பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில், குறித்த ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானையின் தாக்குதலில் பலியான மேற்படி ஊடகவியலாளர், ஹிங்குராகொட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

நன்றி: வீடியோ – ஹிரு ரி.வி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்