திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

🕔 September 7, 2015

Masoor MP - 02
– யூ.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 1600 திவிநெகும பயனாளிகளுக்கு
வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை, ஜனாதிபதி  கலாச்சார – விளையாட்டு
கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வாழ்வாதார உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

திவிநெகும திணைக்களத்தின், வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தி கீழ், வழங்கப்பட்ட மேற்படி உதவிகள் மூலம், 1600 குடும்பங்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் வைபவத்தில்  திவிநெகும திணைக்களத்தின்  உயர் அதிகாரிகள் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.Masoor MP - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்