அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம்

🕔 September 5, 2015

Duminda dissanayake - 01க்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் பொருட்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சபைக்குச் சமூகமளித்திராத ஸ்ரீ.ல.சு.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்று, சு.கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, சு.கட்சியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில், சு.கட்சியின் செயலாளர் மேலும் கூறுகையில்;

“மேற்படி பிரேரணைக்கு ஆதரவாக, ஐ.ம.சு.முன்னணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதேவேளை, பிரேரணைக்கு எதிராக 16 பேர் வாக்களித்திருந்த போதிலும், அவர்களில் எவரும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களல்லர்” என்றார்.

மேற்படி பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு – கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்