ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரி. ரஸ்மின் எழுதிய, இரண்டு நூல்கள் வெளியீடு

– அஸ்ரப் ஏ. சமத் –
சட்டத்தரணி ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் ஊடகவியலாளர் எம்.ரி. ரஸ்மின் ஆகியோர் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை, வெள்ளவத்தை குளோபர் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் – பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சிறப்பு அதியாகவும் கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டு வைத்தனர்.
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் சங்கம், மேற்படி நூல்களின் வெளியீட்டு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
‘இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி: முஸ்லீம் விவாவக விவாகாரத்துச் சட்டமும், இஸ்லாமிய சட்டமும்’ எனும் தலைப்பில் – சட்டத்தரணி ஹஸனாஹ் சேகு ,ஸ்ஸதீன் எழுதிய புத்தகமும், ‘இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி’ எனும் தலைப்பில், இஸ்லாமிய அறிஞர்களின் ஆக்களை ஒன்று திட்டிய மற்றுமொரு புத்தகமும் இதன்போது வெளியிடப்பட்டன. இரண்டாவது நூலினை சட்டத்தரணி ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் ஊடகவியலாளர் எம்.ரி. ரஸ்மின் ஆகியோர் இணைந்து தொகுத்துள்ளனர்.
நிகழ்வில், சட்டத்தரணி சபானா ஜுனைதீன் மற்றும் மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிறாஜ் மசூர் ஆகியோர், நூல்கள் பற்றி உரையாற்றினார்கள்.


