மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு

🕔 September 4, 2015
Mobitel - 01– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாடிக்கையாளர் சேவை நிலையமொன்றினை, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைத்தார்.

கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடல் நிறுவனமானது, கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நன்மை கருதி, மேற்படி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட புதிய மொபிடல் வாடிக்கையாளர் சேவை நிலையத்தை,  மட்டக்களப்பு மத்திய வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக, மட்டக்களப்பு நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ள மேற்படி புதிய வாடிக்கையாளர் சேவை நிலையத்தை, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன திறந்து வைத்தார்.

இதன் போது, மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பல்வேறு சேவைகள் மொபிடல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மொபிடல் வாடிக்கையாளர் சேவை நிலைய திறப்பு விழாவில், மொபிடல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்ஜித் ஜி ரூபசிங்க உட்பட ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடல் நிறுவனங்களின் உயரதிகாரிகள், மதப் பெரியார்கள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Mobitel - 03Mobitel - 04

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்